ஆட்டத்தை ஆரம்பித்த வில்லி மேகனா... கோபத்தில் மீராவை ஓங்கி அறைந்த கௌதம் !
மீராவை ஓங்கி அறையும் கௌதமின் பரபரப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

சன் டிவியில் சீரியல்கள் தற்போது பரபரப்பு திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருக்கிறது. பார்வையாளர்களை கவர்ந்துள்ள இந்த சீரியல்கள் அதிக டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற்றுள்ளன. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல்தான் ‘கண்ணான கண்ணே’. அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் உணர்வுப்பூர்வமான கதைதான் இந்த சீரியல்.

இந்த சீரியல் தற்போது, வில்லியின் சூழ்ச்சியால் மொத்த சொத்துக்களை இழந்து கௌதம் நிற்கிறார். இதை எப்படியாவது பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று கௌதமன் மூத்த மகள் மீரா முயற்சி செய்கிறார். ஆனால் இதற்கு பல தொந்தரவு செய்து வருகிறார் வில்லி மேனனன்.

இதனால் டென்ஷனாகும் மீரா, வில்லி மேனகாவை போலீசில் மாட்டிவிடுகிறார். இதையடுத்து ஒரு நாள் ஜெயிலில் இருக்கிறார் மேனகா. ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வரும் மேனகா, மீராவின் தங்கையை கார் ஏற்றி கொல்ல நினைக்கிறார். இதை பார்த்த கௌதம், பதற்றத்தில் மீரா ஓங்கி அறையும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
யுத்தம் இனிமேதான் ஆரம்பம்!
— Sun TV (@SunTV) April 4, 2022
கண்ணான கண்ணே | திங்கள் - சனி | 8.30 PM #SunTV #KannanaKanne #KannanaKanneOnSunTV #KannanaKannePromo pic.twitter.com/jSPZFkpjV8

