‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கரு பழனியப்பன்... அதிரடி முடிவின் பின்னணி என்ன ?

Karu Palaniappan

‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியிலிருந்து இயக்குனர் கரு பழனியப்பன் அதிரடியாக வெளியேறி உள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார் கரு பழனியப்பன். சமூக சிந்தனைக் கொண்ட அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ‘தமிழா தமிழா’ என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கு நிகராக ஒளிப்பரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது. 

Karu Palaniappan

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து இயக்குனர் கரு பழனியப்பன் அதிரடியாக விலகியுள்ளார். இது குறித்த காரணத்தையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 

எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் 

வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!!இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க , வழி காட்டி இருக்கிறது.. 

 தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த

ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...! 

 சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! 

 

நன்றி Zee Tamil ZEE5 Tamil Siju Prabhakaran... உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி ! முத்தங்கள் ! 

 

எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்! ! என்று குறிப்பிட்டுள்ளார். 


 

Share this story