புதிய வசுவாக மாறிய பிரபல தொகுப்பாளினி.. 'தமிழும் சரஸ்வதியும்' புதிய அப்டேட்

vj sangeetha

பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் சங்கீதா, 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல் 'தமிழும் சரஸ்வதியும்'. குடும்ப பின்னணி கொண்ட கதைக்களத்தில் உருவாகி ஒளிப்பதிவாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்ணை மையப்படுத்தி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலின் டிஆர்பி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

vj sangeetha

இ‌ந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் தீபக் மற்றும் நக்ஷத்ரா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களை தவிர இந்த சீரியலில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரம் வசு. இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தர்ஷனா. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவர் சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில் தர்ஷனாவிற்கு பதில் வசு கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வசு கதாபாத்திரத்தில் பிரபல தொகுப்பாளினி சங்கீதா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வார எபிசோடில் அவரின் என்ட்ரி இருக்கும் என்று கூறப்படுகிறது.  ‌ 

 

 

 

 

 

Share this story