போட்ட சபதத்தில் ஜெயித்த சரஸ்வதி... அசிங்கப்பட்ட கார்த்திக் !

Thamizhum Saraswathiyum serial

தனது கணவருக்காக போட்ட சபதத்தில் சரஸ்வதி ஜெயித்த அதிரடி ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

விஜய் டிவியில் இரவு 7.30 மணிக்கு பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’. ஆரம்பத்தில் கொஞ்சம் சொதப்பினாலும் தற்போது அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் சரஸ்வதி என்ற இருகதாபாத்திரங்களை வைத்து இந்த சீரியல் நகர்கிறது. படித்த பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தமிழின் தாய் நினைக்கையில் படிக்காத சரஸ்வதி மருமகளாக வருகிறார். இதையடுத்து ஏற்படும் அதிரடி திருப்பங்கள் இந்த சீரியலில் கதை. 

Thamizhum Saraswathiyum serial

தற்போதைய கதைப்படி கணவர் தமிழை சொந்த கம்பெனியில் பணி செய்யும்போது தம்பி கார்த்திக் அசிங்கப்படுத்துகிறார். அதை தட்டிக் கேட்ட சரஸ்வதியிடம் முதல்ல நீங்க ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டு பேசுங்க என்று சொல்கிறார். இதனால் கோபமாகும் சரஸ்வதி, நான் ப்ளஸ் பாஸ் பண்ணால் மீண்டும் கம்பெனி பொறுப்பை தமிழுக்கே தரவேண்டும் என்ற சவாலுடன் செல்கிறார். 

Thamizhum Saraswathiyum serial

இதையடுத்து பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் படித்து எப்படியோ ப்ளஸ் ஃப்ர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெறுகிறாள். இந்நிலையில் தனது கணவர் தமிழை அழைத்துக் கொண்டு கார்த்திக்கை சந்திக்கும் சரஸ்வதி, நான் சொன்னபடி ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றுவிட்டேன். அதனால் பழையபடி கம்பபெனி நிர்வாகத்தை தமிழுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற சொல்லும் பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 


 

Share this story