அர்ஜூன் செய்த சூழ்ச்சி.. நடுரோட்டிற்கு வந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ !

ThamizhumSaraswathiyum

அர்ஜூன் செய்த சூழ்ச்சியால் ‘தமிழும் சரஸ்வதியும்’ நடுரோட்டிற்கு வந்துள்ளது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. 

விஜய் டிவியில் பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது ‘தமிழும் சரஸ்வதியும்’. கூட்டுக் குடும்ப பின்னணியை கொண்டு ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்று வருகிறது. தனது குடும்பத்தை கட்டுப்பாடுடன் வைத்திருக்கும் கோதையின் குடும்பத்தை உடைப்பது தான் தற்போது எபிசோடா ஒளிப்பரப்பாகி வருகிறது. 

ThamizhumSaraswathiyum

கோதையின் குடும்பத்தை எப்படியாவது உடைத்து தனது கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும் என்று அர்ஜூன் திட்டம் போட்டு வேலை செய்து வருகிறார். அதன்படி கோதை கொடுத்த டாஸ்க்கில் ஜெயிக்காத அர்ஜூன், தமிழை சதி வலையில் சிக்க வைக்கிறார். அதாவது தன்னை தமிழ் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாக கோதையை நம்ப வைக்கிறார். இதனால் குடும்பம் உடைகிறார். 

ThamizhumSaraswathiyum

இதை நம்பி தமிழையும், சரஸ்வதியும் வெளியே அனுப்புகிறார் கோதை. அதன்பிறகு போலீசில் புகார் கொடுத்த தமிழுக்கு நெருங்கடி கொடுக்கிறார் அர்ஜூன். இப்படி அதிரடியான திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கும் சீரியலில் தற்போதைய கதைப்படி, போலீஸ் நிலையில் இருந்து வீட்டிற்கு வரும் தமிழை அங்கிருந்து காலி செய்கிறார். இதனால் நடுரோட்டில் தமிழ் இருப்பது பார்வையாளர்களை கவலையடைய செய்துள்ளது. 


 

 

Share this story