மனைவியின் வளைக்காப்பு கொண்டாட்டம்.. புகைப்படங்களை பகிர்ந்த விஜய் டிவி நடிகர் !
தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக இருப்பவர் நவீன் வெற்றி. தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் இவர், நீலி சீரியலின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து ‘தேன்மொழி’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

பின்னர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட பல முக்கிய சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதையடுத்து தற்போது ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு சௌமியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தனது மனைவி சௌமியாவுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

