"தமிழும் சரஸ்வதியும்": வசமாக சிக்கிய அர்ஜுன், கோதை எடுத்த அதிரடி முடிவு!

photo

திரைப்படங்கள், வெப்சீரிஸ் போலவே சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்பொது முக்கிய கட்டத்தில் உள்ளது. அதற்கான புரொமோ வெளியாகியுள்ளது.

photo

தங்கையின் கணவனான தன்னை (அர்ஜுனை) தமிழ் கொலை செய்ய கத்தியால் குத்தியதாக நாடகமாடி தமிழ், மற்றும் சரஸ்வதியை ஸ்கெச் போட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பிய அர்ஜுன், கோதை குடும்பத்தை பிரித்த சந்தேஷத்தில் வலம்வந்தார். ஆனால் இந்த சந்தோஷம் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. அர்ஜுன் மீது கோதைக்கே சந்தேகம் வர, களத்தில் குதித்த அவர் அர்ஜுனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயற்சித்தார். அதற்கு  கோதையின் கணவர், வசுந்தரா, சரஸ்வதி என அனைவரும் உதவி செய்கின்றனர்.

ஒரு வழியாக தமிழ், அர்ஜுனை கொலை செய்ய வில்லை என்ற சிசிடிவி ஆதாரத்தை திரட்டி அனைவரின் முன்பும் சரஸ்வது போட்டு காட்டுகிறார். இதனை ஒட்டு மொத்த குடும்பமும் பார்க்க, வசமாக சிக்கிகொண்ட அர்ஜுன் என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கிறார். வீடியோவை பார்த்து உண்மையை அறிந்த கோதை அர்ஜுனை ‘ எங்க வீட்டை விட்டு வெளியபோடா’ என அதிரடியாக  கூறுகிறார்.

Share this story