விபத்தில் சிக்கியது பிரபல யூடியூபரின் கார்.. மூதாட்டி உயிரிழந்ததால் சோகம் !

irfan

 பிரபல யூடியூப்பர் இர்ஃபானின் கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பிரபல யூடியூப்பராக இருப்பவர் இர்ஃபான். தனது யூட்யூப் சேனலில் உணவு குறித்து பல வீடியோக்களை போட்டு பிரபலமானார். அவர் போடும் ஒவ்வொரு வீடியோவிலும் இர்ஃபான் பேசும் எளிமையான பேச்சும், விதவிதமாக அவர் தேடி செல்லும் ஓட்டலும் மிகவும் பிரபலம். 

irfan

இப்படி மிகவும் பிரபலமாக இருக்கும் இர்ஃபான், சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலியை கடந்த 14-ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். 

இந்நிலையில் சென்னை மறைமலை நகர் அருகே தனது அசாருதீனுடன் இர்ஃபான் காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையை கடக்க சென்ற 55 வயது பத்மாவதி என்ற மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Share this story