பிக்பாஸ் வீட்டிற்குள் நமீதா மாரிமுத்துவிற்குப் பதில் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே நுழையப் போவது இவர் தான்!

namitha-marimuthu3

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் வைல்டு கார்டு மூலம் நுழைய உள்ள போட்டியாளர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். முதல் வாரத்தில் திருநங்கை நமீதா மாரிமுத்து, உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தில் திடீரென பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

namitha marimuthu

தற்போது நமீதா மாரிமுத்துவிற்குப் பதில் மற்றொரு போட்டியாளரை வைல்டு கார்டு மூலம் வீட்டிற்குள் அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரி மூலம் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது நமீதா மாரிமுத்து வெளியேற்றத்தால் முதல் வாரத்திலே வைல்டு கார்டு மூலம் போட்டியாளர் அனுப்பப்பட உள்ளார். 

shalu-shamu-4

எனவே வரும் அக்டோபர் 16-ந் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரி மூலமாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராகக் களமிறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story