ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர்!

vinoth-babu

விஜய் டிவி சீரியல் நடிகரான வினோத் பாபு ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் வினோத் பாபு. அந்த நிகழ்ச்சி அவரை மக்கள் வந்து பிரபலமாக்கியது. அதையடுத்து 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடர் மூலம் மக்களை இன்னும் வரவேற்பு பெற்ற அவர் தனது மனைவி சிந்து உடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

vinoth-babu-34

அந்தப் போட்டியில் இருவரும் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தென்றல் வந்து என்னைத் தீண்டும் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக வினோத் பாபு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். "வின்சின் பிறந்து விட்டான். ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் நலமாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this story