‘வானத்தைப் போல’ சீரியலில் இருந்து விலகிய ப்ரீத்தி குமார்.. அவருக்கு பதில் யாருன்னு தெரியுமா ?

vanathai pola

‘வானத்தைப் போல’ சீரியலில் இருந்து ப்ரீத்தி குமார் விலகியுள்ளதால் அவருக்கு பதில் புதிய நடிகை இணைந்துள்ளார். 

சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘வானத்தைப் போல’. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த சீரியல் உச்சக்கட்ட விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

vanathai pola

இந்த சீரியலில் அண்ணனாக சின்ராசு கதாபாத்திரத்தில் ஸ்ரீகுமாரும், தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் மான்யாவும் நடித்து வருகின்றனர். அதேபோன்று பொன்னி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரீத்தி குமார் நடித்து வருகிறார். இந்நிலையில் சொந்த காரணங்களால் நடிகை ப்ரீத்தி சமீபத்தில் விலகியதாக தகவல்கள் வெளியாகின. 

vanathai pola

இந்நிலையில் புதிய பொன்னியாக யார் நடிப்பார் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. புதிய பொன்னியாக பிரபல நடிகை ஷாந்தினி நடிக்கிறார். இதற்கான ப்ரோமோ விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை ஷாந்தினி, நானே ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, காதல் முன்னேற்ற கழகம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாததால் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story