‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை... அவரே வெளியிட்ட காரணம் !

Debjani Modak

‘வானத்தை போல’ சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் விலகியுள்ளார். 

சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘வானத்தை போல’. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பியிலும் இந்த சீரியலுக்கு நல்ல ரேட்டிங் உள்ளது. 

Debjani Modak

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை தேப்ஜானி. இந்நிலையில் இவர் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள அவர், என்னை நன்றாக நடத்திய சீரியல் குழுவினருக்கு நன்றி. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான நலம் விரும்பிகளை நான் சந்தித்தேன். ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த், ஸ்வேதா, சாந்தினி பிரகாஷ் ஆகியோருடன் பணிபுரிந்ததை மிஸ் செய்கிறேன். ஆனால் நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். உங்கள் நட்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜூப் சட்டர்ஜி இயக்கிய நாக் அவுட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு வாய்ப்பு இல்லாததால் சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர், ‘ராசாத்தி’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story