'வனிதா'வின் 3வது கணவர் 'பீட்டர்பால்' திடீர் மரணம்..... வாய் திறக்காத காரணம் என்ன?

photo

வனிதாவின் 3வது கணவர் பீட்டர்பால் திடீரென மரணமடைந்த செய்தி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

photo

நடிகை வனிதா ஏற்கனவே 2 திருமணங்கள் செய்து அதில் விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த 2020ல் தனக்கு என்று ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்பதற்காக பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெரும் விவாதத்தை கிளப்பியது. குறிப்பாக இதனால் நடிகைகளான கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இதில் தங்கள் கருத்துகளை சொல்ல அது போலீஸ் கேஸ்வரை சென்றது. இது ஒரு புறம் இருக்க  பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவி எலிசபத்தை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்தார். இதனால் எலிசபெத்தும் போலீஸில் புகார் அளித்தார். அவர் ஒரு குடிகாரர், போதைக்கு அடிமையானவர் என எவ்வளவோ எலிசபெத் சொல்லியும் வனிதா அதை கேட்கவில்லை.

photo

இந்த நிலையில் அவர்கள் ஹனிமூன் சென்ற இடத்தில் பீட்டர்பால் குடித்துவிட்டு வனிதாவிடம் சண்டையிட்டதால் வனிதா அவரை துரத்திவிட்டதாக செய்திகள வெளியானது. தொடர்ந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அதிகமான குடிபழக்கம் காரணமாக கல்லீரல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக பீட்டர்பால் சிகிச்சை பெற்று வந்ததாகவும்.கடந்த வாரம் அவரின் உடல்நிலை மிக மோசமாகவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக தகவல் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த எந்த தகவலையும் வனிதா தனது பக்கத்தில் வெளியிடவில்லை. இந்த நிலையில் தனது முன்னாள் கணவர் என்ற வகையில் அவர் பீட்டரின் இறுதி சடங்கிற்கு செல்வாரா? என தெரியவில்லை.

Share this story