'வனிதா'வுக்கு இப்படி ஒரு நோயா!.. - நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம்.

photo

நடிகை வனிதாவுக்கு ‘க்ளாஸ்ட்ரோபோபியா’ என்னும் நோய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

விஜய்க்கு ஜோடியாக சினிமாதுறையில் அறிமுகமாகி இன்று சர்ச்சை நடிகையாக வலம்வருபவர் வனிதா விஜயகுமார். இவர் தற்போது சில சீரியல்களில்  நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு இருக்கு ஒரு நோய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

photo

அதாவது, அவருக்கு ‘க்ளாஸ்டோபோபியா’ என்னும் நோய் இருக்கிறதாம். அவரால் அதிக நேரம் கழிவறை, லிப்ட் போன்ற சிறிய இடங்களில் நேரத்தை செலவிட முடியாதாம். அங்கு சென்றாலே பயமாக இருக்குமாம். இந்த விஷயம் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் தான் தெரியுமாம். இதனை  அறிந்த ரசிகர்கள் வெளியில் தைரியமானவராக காட்டிகொண்டாலும் இவருக்கு இப்படி ஒரு நோயா என கூறிவருகின்றனர். இப்படியாக தனது வாழ்கை குறித்தும் குழந்தைகள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Share this story