‘எதிர்நீச்சல்’ சீரியல்: அடுத்த ஆதிகுணசேகரன் இவரா?

photo

சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்கள் மத்தியில் மில பிரபலம். அதிலும் அதில் அதிகுணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்துவுக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். அவரது திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அவரது கதாப்பாத்திரத்தில் அடுத்து யார் நடிக்கப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதன்படி, அடுத்த ஆதிகுணசேகரனாக நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்தாம்மா ஏய்…’ என பேசும் மாரிமுத்துவின் வசனம் மிக பிரபலம் அதேப்போல வேல ராமமூர்த்தி பேசிய ‘எளந்தாரி பய…’ என்ற வசனம் பிரபலம். ஆதி குணசேகரனாக, வேல ராமமூர்த்தி நடிக்கும் பட்சத்தில் அந்த வசனம் ‘இந்தாம்மா எளந்தாரி…ஏய்.’ என இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.

Share this story