விஜய் சேதுபதியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியீடு!
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிகழ்ச்சி எவ்வளவு டிஆர்பி புள்ளிகள் பெரும் என்பது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில், பிக் பாஸ் - 8 தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR பெற்று சாதனை படைத்துள்ளது.
ரசிகர்கள் டிவியில் மட்டும் அல்லாமல், டிஜிட்டல் தளங்களின் வழியாகவும் பலர் இந்நிகழ்ச்சியினை கண்டுகளித்து வருகிறார்கள். அதன்படி முதல் வாரத்தில் 32 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பார்த்தனர். 162 மில்லியன் பார்வைகள் சமூக ஊடகங்களில் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.