மகளை வைத்து மிரட்டும் மனைவி.. பரபரப்பு புகாரளித்த தாடி பாலாஜி !

dadi balaji

மனைவியின் தவறான வழிக்காட்டுதலால் மகள் வழிமாறி செல்வதாக தாடி பாலாஜி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

சினிமாவில் பிரபல நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருப்பவர் தாடி பாலாஜி. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். தற்போது ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார். 

dadi balaji

இதற்கிடையே கடந்த 2017-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி நித்யாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் மகள் ஒருவர் இருக்கிறாள். இந்நிலையில் 7-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள், மனைவியால் தவறாக வழி நடத்தப்படுவதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்துள்ளார். 

dadi balaji

மேலும் அந்த மனுவில், மனைவி நித்யா பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் தனது மகளின் வாழ்க்கை வீணாவதை தன்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும், அதனால் மனைவியிடமிருந்து தனது மகளை மீட்டு தருமாறும் தாடி பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோன்று மகளை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். 

 

 

Share this story