அப்படியே ஆடிப்போன கோபி..‌ கெத்துக்காட்டும் பாக்யா !

baakyalakshmi

பாக்யலட்சுமி சீரியலில் கோபியிடம் விட்ட சவால்படி  பாக்யா பணத்தை கொடுத்து அதிர வைத்துள்ளார். 

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது 'பாக்யலட்சுமி' சீரியல். கணவன் தன்னை தூக்கி எறிந்து சென்றாலும் தனியாக குடும்பத்தை காப்பாற்றும் பாக்யாவின் கதை தான் இந்த சீரியல். தான் கட்டிய வீட்டை விட்டு செல்லவேண்டும். இல்லையென்றால் அதற்கான பணம் கொடுக்க வேண்டும் என்று பாக்யாவிடம் சவால் விடுகிறார் கோபி. 

baakyalakshmi

கோபிவிட்ட சவாலை ஏற்றுக் கொண்ட பாக்கியா பணத்தை தந்து வீட்டை மீட்டுக் கொள்வதாக கூறுகிறார். கோபி கூறியதை கேட்ட குடும்பத்தினர் கொந்தளிக்கின்றனர். அதனால் சினிமா தயாரிப்பாளர் பொண்ணை திருமணம் செய்து வைத்து நிலைமையை சமாளிக்க ஈஸ்வரி பாட்டி பற்றி முடிவு செய்கிறார். ஆனால் தனது மகனுக்கு பிடித்த பெண்ணான அமிர்தாவை திருமணம் செய்து வைத்து பாக்கியா அதிரடி காட்டுகிறார். 

baakyalakshmi

சவால் விட்டபடி கோபியிடம் பணத்தை கொடுக்க வேண்டும் என்பதால் அடுத்தடுத்து சமையல் ஆர்டர்களை பாக்யா பிடிக்கிறார். 8 நாட்கள் தொடர்ந்து சமையல் ஆர்டர்களை எடுத்து சிறப்பாக செய்து முடிக்கிறார். இந்நிலையில் கோபியை வீட்டுக்கு அழைக்கும் பாக்கியா அதிரடியாக 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத கோபி அதிர்ந்து போகிறார். இப்படி அதிரடியான திருப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. 


 

Share this story