அசிங்கப்படுத்திய கோபி... அவமானத்தில் தலைக்குனிந்த பாக்யா !

bakiyalakshmi

'பாக்யலட்சுமி' சீரியலில் குடும்பத்தினரை கோபி அசிங்கப்படுத்துவதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது சொந்த குடும்பத்தை விட்டு தோழியான ராதிகாவை திருமணம் செய்யும் கோபியும், அதனால் பாக்யாவின் கதை தான் இந்த சீரியல். 

 bakiyalakshmi

தற்போதைய கதைப்படி இந்த சீரியலில் பாக்யாவின் மூத்த மகன் செழியனின் மனைவிக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது இனியாவிற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். எதிர்பார்த்தபடி அங்கு வரும் இனியா, தனது கோபி மற்றும் ராதிகாவுடன் வருகிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். 

bakiyalakshmi

ஜெனிக்கு வளைக்காப்புக்கான வைபவங்கள் நடைப்பெற்ற பிறகு கோபி செல்கிறார். அப்போது அங்கு இருந்த உறவினர்கள் பாக்யா மற்றும் குடும்பத்தினரை சராமாரியான கேள்விகளை கேட்கின்றனர். இது பாக்யா குடும்பத்தினருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கோபமாகும் பாக்யாவின் இளைய மகன் செழியன் கோபியிடம் கடுமையாக சண்டை போடுகிறார். இது பாக்யலட்சுமி சீரியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story