மனம் திருந்தும் பாரதி.. மகிழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்

பாரதி மனம் திருந்தி தனது தவறை உணர்வதுபோல் இந்த வார எபிசோடுகள் நகரவிருப்பது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
விஜய் டிவியில் தொடர்ந்து நெம்பர் ஒன் இடத்தை பிடித்து வரும் சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. சூப்பர் ஹிட்டடித்து வரும் இந்த சீரியலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக நாளுக்கு நாள் இந்த சீரியலின் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் இந்த சீரியலில் காட்டப்படும் அடுத்தடுத்த திருப்பங்கள் தான். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை சேனல் மாற்றாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர்.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரை வைத்துதான் மொத்த சீரியலும் நகர்ந்து வருகிறது. அதோடு வில்லின் வெண்பா, மாமியார் சௌந்தர்யா கதாபாத்திரங்களும் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என்பதுதான் நீண்டநாள் எதிர்பார்ப்பு. அதைதான் இயக்குனர் விறுவிறுப்பாக காட்டி வருகிறார். தற்போதைய கதைப்படி, தனது இரண்டாவது குழந்தை எங்கே என்று தேடி வருகிறார் கண்ணம்மா. ஆனால் அதற்கான எந்தவித தகவலும் கண்ணம்மாவுக்கு கிடைக்கவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள வெண்பா, கண்ணம்மாவை தன்னுடைய சதி வலையில் சிக்க வைக்கிறார்.
இது ஒருபுறம் இருக்கையில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண், டாக்டர் பாரதியை பார்த்து ஒரு விஷயத்தை சொல்கிறார். என்னுடைய அண்ணனின் சந்தேக பார்வையால் எனது அண்ணியை பிரிந்து சென்று, அவர்களின் மொத்த வாழ்க்கையும் பாழாய் போய்விட்டது என்று கூறுகிறாள். இதை கேட்ட பாரதி, நாமும் கண்ணம்மாவை தவறாக புரிந்துக்கொண்டோமோ என்று எண்ணி மன வருத்தப்படுகிறார். அப்போது வெண்பா வந்து குண்டையை குழப்ப, வீட்டிற்கு செல்லும் பாரதி, தனது அம்மா சௌந்தர்யாவிடன் நடந்ததை கூறிகிறார். தற்போது பாரதியின் இந்த மன மாற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையைடுத்து பாரதி கண்ணம்மா சீரியலில் என்ன ட்விஸ்ட் நடக்கும் என்ற ஆவலுக்கும் அனைவரும் காத்திருக்கின்றனர்.