புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சஞ்சீவ்... என்ன சீரியல் தெரியுமா ?

sanjeev

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சஞ்சீவ் வெங்கட் புதிய சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.  

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். நடிகர் விஜய்யின் நண்பரான அவர், சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு கடந்த 2002-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். பின்னர் ‘திருமதி செல்வம்’ சீரியல் சஞ்சீவிக்கு நல்ல பெயரை கொடுத்தது.

sanjeev

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ள ‘கிழக்கு வாசல்’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடிக்கவுள்ளார். சின்னத்திரையில் மீண்டும் சஞ்சீவ் நடிப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூவே பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய சீரியல்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் நடிகை அஸ்வினி ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.‌

sanjeev

இந்த சீரியலில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறனர்.  முன்னணி இயக்குனர் விசுவின் சூப்பர் ஹிட் திரைப்படமான 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தை தழுவி இந்த சீரியல் எடுக்கப்படுகிறது. குடும்ப பின்னணி கதைக்களத்தை கொண்ட இந்த சீரியலை பார்க்க இல்லத்தரசிகள் ஆவலுடன் இருக்கின்றனர். 


 

Share this story