பிக்பாஸ் தொடங்குவதால் முக்கிய சீரியலுக்கு என்ட்கார்டு... அதிர்ச்சியில் ரசிகர்கள் !

bigboss

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்குவதால் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிக்கப்பட உள்ளது. 

விஜய் டிவியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி 5 சீசன்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கவுள்ளது. இதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

pavam ganesan

நிகழ்ச்சி தொடங்குவதையொட்டி கமலின் கர்ஜிக்கும் அட்டகாசமான ப்ரோமோ வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பப்பட உள்ளதால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘பாவம் கணேசன்’ சீரியலுக்கு என்ட் கார்டு போடப்பட உள்ளது. 

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நவீன், இந்த சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் வரவில்லை என கூறப்படுகிறது. அதனால் இந்த சீரியலை முடிக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது. 300 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ராஜா ராணி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சில சீரியல்களின் நேரங்களும் மாற்றப்பட உள்ளது.

Share this story