சந்தியாவிற்கு கண்டிஷன் போடும் சிவகாமி.. போலீஸ் கனவு நிறைவேறுமா ?
சந்தியாவிற்கு சிவகாமி புதிய கண்டிஷன் போடுவதால் ‘ராஜா ராணி 2’ சீரியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியல் மிகவும் பிரபலமானது. கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியலில் கதைக்களம் நகர்ந்து வருகிறது. அதில் தனது மருமகள் சந்தியா பொறுப்பாக வீட்டை கவனித்துக் கொள்ளவேண்டும் என்று மாமியார் சிவகாமி நினைக்கிறார். ஆனால் சந்தியாவோ எப்படியாவது, தனது சிறு வயது கனவான போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி கதை சென்றுக் கொண்டிருக்கையில் வீட்டிற்கு தெரியாமல் தனது கணவர் சரவணன் துணையுடன் ஐ.பி.எஸ் பயிற்சிக்காக படித்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள பயிற்சி மையத்திற்கு சென்று படித்து வருகிறார். இந்நிலையில் தற்போதைய கதைப்படி சாமியார் ஒருவரை பார்ப்பதற்காக சிவகாமி மற்றும் குடும்பத்தினர் செல்கின்றனர். அந்த சாமியார் மடம் அருகில்தான் சந்தியா படித்து வருகிறார்.

அப்போது அங்கு சந்தியா இருப்பதை குடும்பத்தினர் பார்த்து விடுகின்றனர். இதனால் சரவணன் மற்றும் சந்தியா மீது சிவகாமி கோபமடைகிறார். இதையடுத்து சிவகாமியிடம் மன்னிப்பு கேட்கும் சந்தியாவிடம், போலீஸ் ஆவதற்கு ஓகே சொல்கிறார். ஆனால் ஒரு கண்டிஷன் இருக்கிறார். அதாவது பூஜை அறையில் இருக்கும் மூன்று விளக்குகள் வைக்கப்பட்டிருக்கும். வீட்டில் நீ எதாவது தவறு செய்தால் ஒவ்வொரு விளக்காக அணைக்கப்படும். மூன்று விளக்குகளும் அணைக்கப்படும் போது போலீஸ் வேலைக்கு செல்லக்கூடாது என்று சிவகாமி கூறுகிறார். இதை கேட்ட சந்தியாவும், சரவணனும் அதிர்ச்சி அடையும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

