பிரபல சீரியலுக்கு என்ட்டு கார்டு போட்ட விஜய் டிவி..‌ திடீரென முடிக்கப்பட்ட சீரியல் !

rajarani 2

பிரபல சீரியல் ஒன்றை திடீரென விஜய் டிவி முடித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 விஜய் டிவியில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று  ஒளிப்பரப்பாகி வந்த  'ராஜா ராணி 2'. ஏற்கனவே இந்த சீரியலின் முதல் சீசன் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சீசன் கிராமத்து கதைக்களத்தில் ஒளிப்பரப்பாகி வந்தது.‌ ஏராளமான பார்வையாளர்களை கொண்ட இந்த சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு பரபரப்பாக நகர்ந்து வந்தது. 

rajarani 2

கடந்த சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் நடித்து வந்தவர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். அந்த வகையில் முதலில் ஆல்யா மானசாவும், அடுத்து ரியா சுமன் என மூன்று பேர் நடித்தனர். இது ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.சரவணன் கேரக்டரில் சித்துவும் முதலில் நடித்து வந்தனர். அதேபோன்று வில்லி வேடத்தில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார். 

rajarani 2

முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து சீரியல் இருந்து விலகிய போதும் விறுவிறுப்பான கதைக்களத்தால் சீரியல் அனைவரிடமும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் இந்த சீரியல் திடீரென இன்றுடன் முடிக்கப்பட்டுள்ளது.  இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வந்த நேரத்தில் புதிய சீரியல் ஒன்று ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.  ‌ 

Share this story

News Hub