விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சீரியல்கள் – ஷாக் ஆன ரசிகர்கள்.

photo

வெள்ளித்திரை போலவே சின்னத்திரைக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்காக சீரியல்கள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்திய தகவலாக கிட்டதட்ட 5ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வரப்போவதாகவும் அதன் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டு விட்டதாகவும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சீரியலும் முடிவுக்கு வர உள்ளது.

photo

ரசிகர்களின் விருப்பமான தொடர்களுள் ஒன்றான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ தொடர் தான் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாம். பவித்ரா ஜனனி (அபி) மற்றும் வினோத் பாபு (வெற்றி) மைய்ய கேரக்டரில் நடிக்கும் இந்த தொடருக்கு விரைவில் சுபம் போட உள்ளனர். எதிர்பாராத விதமாக அபிக்கு விருப்பமில்லாமல் வெற்றி, அபி திருமணம் நடக்கிறது. வேறு வழி இல்லாமல் திருமணத்தை ஏற்கும் அபி, கர்பமாகிறார். அந்த சமயத்தில் வெற்றி சிறைக்கு செல்ல நேரிடுகிறது. இதனால் பிரியும் இந்த தம்பதி பல வருடங்களுக்கு பின் சந்திக்கின்றனர். அப்போது அபி கலெட்ராக உள்ளார். வெற்றி ரௌடியாக உள்ளார்.

photo

வெற்றியின் குழந்தைதான் சுடர் என்பதை மறைத்து வளர்த்து வருகிறார் அபி, ஒரு கட்டத்தில் உண்மை தெரியவருகிறது, மற்றொருபுறம் சதிதிட்டம் தீட்டும் கண்மனி வெற்றியை அடைய நினைக்கிறார். இதை எல்லாம் கடந்து அபி-வெற்றி ஒன்று சேர்வார்களா? என்பது தான் கதை. தற்போதைய தகவல்படி இத் தொடரின் கிளைமேக்ஸ் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த தொடருக்கும் எண்ட் கார்டு போட உள்ளனர்.

Share this story