கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் டிவி சீரியல் நடிகையின் திருமணம்.

photo

விஜய் டிவி சீரியல் நடிகையான ஹர்ஷலா, தொழிலதிபரை கரம்பிடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

சன்டிவியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ சீரியலில் நடித்து பிரபலமானவர் ஹர்ஷலா. தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடத்தில் பிருங்கதா பென்னேரி, நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, காவேரி, சஞ்சு மாட்டு உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமலாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது.

photo

அரவிந்த் என்ற தொழிலதிபரை மணம் முடித்துள்ளார் ஹர்ஷலா. அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

photo

Share this story