முக்கிய சீரியல்களின் நேரத்தை மாற்றும் விஜய் டிவி – புது வரவால் நிகழ்ந்த அதிரடி மாற்றம்.

photo

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரைக்கு என்று அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் விஜய் டிவி சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் பல சூப்பர்ஹிட் சீரியல்களை வழங்கிவரும் விஜய் டிவி தற்போது முக்கிய சீரியல்களின் நேரத்தை மாற்றியுள்ளது.

photo

அந்த வகையில் மாலையில்  ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 சீரியல்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆஹா கல்யாணம் என்ற புது சீரியலின் வரவால் இத்தகைய மாற்றம் எற்பட்டுள்ளது.  அதன்படி வரும் மார்ச் 20ஆம் தேதி முதல்  ‘ஆஹா கல்யாணன்’ சீரியல் 7மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதால், 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி 2 ‘சீரியல் இனி, 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தொடர்ந்து 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடர் 6.00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் புது வரவாக வந்துள்ள பொன்னி மற்றும் ஆஹா கல்யாணம் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share this story