சொகுசு கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்... விலை எவ்வளவு தெரியுமா ?
விஜய் டிவி பிரபலம் சுனிதா சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சுனிதா. அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர், ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். தனது தனி திறமையை காட்டி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சுனிதா, சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகை சுனிதா விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த சொகுசு காரின் விலை 60 லட்சமாகும். தனது காருடன் சுனிதா இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.