'சூப்பர் சிங்கர் சீசன் 9' வெற்றியாளரான அருணா... 60 லட்சம் வீட்டை தட்டி தூக்கினார் !

super singer 9

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அருணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிக்கரமாக நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆடிஷன் நடத்தப்பட்டது. கடைசியாக 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

super singer 9

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 பேரும் பல்வேறு சுற்றுகளில் பங்கேற்று பாடினர்.‌ அதில் அருணா, புஜா, அபிஜித், பிரசன்னா, பிரியா ஜெர்சன் ஆகிய 5 பேர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதிப்போட்டி இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வந்திருந்தார். 

super singer 9

இதையடுத்து இறுதிப் போட்டியாளர்கள் ஒவ்வொரு வரும் தங்களது தனி திறமையை வெளிப்படுத்தினர். இறுதியாக மக்கள் அளித்த வாக்களித்ததன் அடிப்படையில் அருணா முதல் போட்டியாளராக வெற்றிப்பெற்றார். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடும், 10 லட்சம் பணமும் வழங்கப்பட்டது.  

இதுதவிர இரண்டாம் இடம்பிடித்த பிரியா ஜெர்சனுக்கு 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடத்தை பிடித்த பிரசன்னாவிற்கு 5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. வெற்றிப்பெற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Share this story