அடுத்த வாரத்துடன் முடியும் பிரபல சீரியல்... இதுதான் காரணமா ?
விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று விரைவில் நிறைவுபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதல் மற்றும் ரொமென்ஸ் கதைக்களங்களில் சீரியல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது விஜய் டிவி. இந்த டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கில் உள்ளனர். சமீபகால டிரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் ரீமேக்காக சீரியல்கள் வர தொடங்கியுள்ளன.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’ படத்தின் பாணியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்தான் ‘வேலைக்காரன்’. மதியம் 2 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வேலனாக நடிகர் சபரியும், வள்ளியாக கோமதி ப்ரியாயும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் மலையாள நடிகை சோனா நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 400 எபிசோடுகளை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் இந்த சீரியல் விரைவில் நிறைவுபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சீரியல் முடிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வரும் நேரத்தில் ‘செல்லம்மா’ என்ற புதிய சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

