'விக்ரம் வேதா' சீரியல் தலைப்புக்கு எதிர்ப்பு... புதிய தலைப்பு என்ன‌ தெரியுமா ?

vikram vedha

 பிரபல சீரியல் ‌‌‌ஒன்றின் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்ததால் அதிரடியாக தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. 

 விஜய் டிவி புத்தம் புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது புதியதாக ஒளிப்பரப்பாக உள்ள சீரியல் 'விக்ரம் வேதா'. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஹீரோ மற்றும் ஹீரோயின் இடையே நடக்கும் காதல் மற்றும் மோதலை வைத்து இந்த சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 

 vikram vedha

கதாநாயகன் விக்ரமுக்கும், கதாநாயகி வேதாவுக்கும் இடையே நடக்கும் கதைக்களம் தான் இந்த சீரியல். இந்நிலையில் இந்த சீரியல் தலைப்புக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது அந்த தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய தலைப்பாக 'மோதலும் காதலும்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

புதிய தலைப்பை மாற்ற காரணம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த சூப்பர் ஹிட்டடித்த 'விக்ரம் வேதா' படம் தான். தனது தயாரித்த படத்தின் பெயரில் சீரியலுக்கு பெயர் வைத்துள்ளதால் உடனடியாக மாற்றவேண்டும் என்று தயாரிப்பாளர் சசிகாந்த், சீரியல் குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதனால் உடனடியாக சீரியலுக்கு தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.  சமீப காலமாக சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தலைப்பை சீரியல் குழுவினர் தங்களது படைப்புகளுக்கு வைத்து வருகின்றனர். இதை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளாத நிலையில் முதன்முறையாக இதுபோன்றதொரு சிக்கல் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

‌ 

 

Share this story