’திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...’ சிகிச்சைக்கு பின் படப்பிடிப்பில் இணைந்த விஜே அர்ச்சனா !
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. நீண்ட நாட்களாக தொலைக்காட்சிகளில் விஜேவாக இருக்கும் இவர், தற்போது விஜய் தொலைக்காட்சி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டு கலக்கியிருந்த அர்ச்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது யூடியூப் சேனல் மூலம் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நிகழ்ச்சிகளை பிசியாக தொகுத்து வந்த அர்ச்சனா, கடந்த மாதம் 10ம் தேதி மூளையில் ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்ட அர்ச்சனா, வீல்சேரில் வீட்டுக்குத் திரும்பி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆபிரேஷனுக்கு பிறகு நீண்ட நாள்காளாக ஒய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பூரண குணமுற்ற அர்ச்சனா, ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது விளம்பரம் படம் ஒன்றில் ரோபோ சங்கருடன் இணைந்து நடித்து வரும் விஜே அர்ச்சனா, அந்த வீடியோ பகிர்ந்துள்ளார். அர்ச்சனாவின் வருகை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

