கதறி கதறி அழுத விக்ரமன்... சோகமான பிக்பாஸ் வீடு !

vikraman

பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் கதறி கதறி அழுத காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவுபெற உள்ளது‌. தற்போது வரை  இறுதிப்போட்டியாளர்களாக அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், மைனா நந்தினி உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் யார் டைட்டிலை வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அசீம் மற்றும் விக்ரமன் இடையே தான் அதிக போட்டி நிலவுகிறது. 

vikraman

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் பணப்பெட்டி வைக்கப்படும். அதை யாராவது ஒரு போட்டியாளர் எடுத்துக் கொண்டு வெளியேறுவர். ஆனால் இந்த முறை இருமுறை பணம் வைக்கப்பட்டது. அதன்படி முதலில் பணப்பை வைக்கும் போது, அதை கதிரவன் எடுத்துக் கொண்டு சென்றார். இதையடுத்து இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கும் போது அதை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அமுதவாணன் பஸ்ஸர் அடித்து எடுத்தார். 

vikraman

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனுக்கு நெருக்கமான போட்டியாளராக இருந்தவர் அமுதவாணன். அவர் திடீரென்று பிக்பாஸ் வீட்டில் இருந்து செல்வதை விக்ரமனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அமுதவாணனை பார்த்து விக்ரமன் கதறி கதறி அழுகிறார். எனது நட்பான அமுதவாணன் பிரிவதை ஏற்றுக்கொள்ளாத விக்ரமன் கதறி அழும் காட்சி வீடியோவாக இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


 


 

Share this story