அப்பா - அம்மா முன்னோடி அந்தரங்க விஷயம்.. சம்யுக்தாவை விளாசிய பிரபல சீரியல் நடிகை !

vishnukanth samyuktha

அப்பா - அம்மா முன்னோடியே அந்தரங்க விஷயத்தை பேசலாமா என நடிகை சம்யுக்தாவை பிரபல சீரியல் நடிகை ரிஹானா விளாசியுள்ளார். 

சின்னத்திரையில் தற்போது ஹாட் நியூஸ்ஸாக இருப்பது விஷ்ணுகாந்த் - சம்யுக்தா விவகாரம். சின்னத்திரை பிரபலங்களாக இருக்கும் அவர்கள், சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அதன்பிறகு ஒரு மாதத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் இருவரும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டி வருகின்றனர். இவர்களது பிரிவு விவகாரம் சின்னத்திரையில் பூதாகரமாக வெடித்துள்ளது. 

vishnukanth samyuktha

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான ரிஹானா, விஷ்ணுகாந்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். நான் நடிகர் விஷ்ணுகாந்துடன் பணியாற்றியுள்ளேன். அவரை பற்றி முழுமையாக தெரியாது என்றாலும் ஓரளவிற்கு தெரியும். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். பிரச்சனையை பேசிதான் தீர்த்துக் கொள்ளவேண்டும். அதைவிட்டு பொதுவெளியில் இப்படி மாற்றிமாற்றி குற்றச்சாட்டுவது நல்லத்தல்ல. 

கணவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்று குடும்ப சண்டையை மீடியாவில் சொல்கிறார். அதுவும் அப்பா - அம்மா முன்னாடி சொல்ல தயங்கும் அந்தரங்க விஷயத்தை கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் பேசி இருக்கிறார். ரவி, ஹரி ஆகியோர் தவறாக நடந்துக்கொண்டதாக கூறும் சம்யுக்தா, கணவர் விஷ்ணுகாந்த் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று கூறுகிறார். பின்னர் எதற்காக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். குடும்ப விஷயத்தை பேசிதான் தீர்க்கவேண்டும் என்று கூறினார். 

 

 

 

Share this story