பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி... வீணாப்போன ரசிகர்களின் எதிர்பார்ப்பு !

vj maheswari

 பிக்பாஸ் வீட்டை விட்டு விஜே மகேஸ்வரி வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6-ல் வார வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க்குகளில் சரியாக விளையாடாத போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. 

vj maheswari

ஏற்கனவே ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம் ஷெரினா வெளியேறினார். இதையடுத்து இந்த வார நாமினேஷனில் அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன் உள்ளிட்டோர் நாமினேஷனில் இடம்பெறவில்லை. மற்றப்படி ரச்சிதா, விஜே கதிரவன், ஷிவின் ஆகியோர் சேஃப் ஜோனில் உள்ளனர். 

vj maheswari

இந்நிலையில் நாமினேஷன் செய்த 7 பேரில் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி வெளியேற்றப்பட்டுள்ளார். கடைசி வரை இருந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியாக விளையாடாமல் வெளியேறி உள்ளனர். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

Share this story