‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’-ல் மீண்டும் இணைந்த விஜே தீபிகா... சீரியல் குழுவினருடன் இருக்கும் புகைப்படம் வைரல் !

pandian stores

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் விஜே தீபிகா இணைந்துள்ளார். 

விஜய் டிவியில் பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ஒரு மளிகை கடையும், ஒரு அண்ணன் மற்றும் மூன்று தம்பிகளின் கதை தான் இந்த சீரியல். அண்ணன், தம்பிகளும், அவர்களின் மனைவிகளிடையே நடக்கும் விஷயங்களை வைத்து தான் தினந்தோறும் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

pandian stores

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், ஷீலா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்கள் இரண்டு முறை மாற்றப்பட்டுள்ளனர். இருந்தப்போதிலும் இந்த சீரியலில் புதிதாக வந்தவர்கள் கதாபாத்திரங்களோடு ஒன்றி நடிக்க ஆரம்பித்தனர். 

pandian stores

இந்நிலையில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர். கடந்த வாரம் அவர் சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். அதனால் இந்த சீரியலில் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அதன்படி இதற்கு இதே கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா மீண்டும் இந்த சீரியலில் இணைந்துள்ளார். அவர் சீரியலில் இணைந்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதிப்படுத்தியுள்ளது. 

 

Share this story