பிக்பாஸ் வின்னர் அவர்தான்... அடித்து சொல்லும் மகேஸ்வரி !

vj maheshwari

பிக்பாஸ் சீசன் 6-ல் விக்ரமன் தான் டைட்டில் பட்டம் வெல்லுவார் என விஜே மகேஸ்வரி தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது.  இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் ஜி.பி.முத்து, ராபர்ட், ரக்ஷிதா, ஷாந்தி அரவிந்த், இலங்கை பெண் ஜனனி, விக்ரமன், அசீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதவிர மைனா நந்தினி வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே‌ நுழைந்தார். 

vj maheshwari

ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அப்போது போட்டியாளர்களிடையே சண்டை, சர்ச்சரவு என மோதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த டாஸ்க்குகளில் சரியாக பங்களிக்காத போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சாந்தி, அசல் கோலார், ஷெரீனா, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதில் ஜிபி முத்து மட்டும் தானாவே வெளியேறிவிட்டார்‌. 

vj maheshwari

இந்நிலையில் போட்டியிலிருந்து வெளியேறிய விஜே மகேஸ்வரி பேசிய போது, விக்ரமன் நூறு சதவீதம் பிக்பாஸ் வீட்டில் இறுதி வரை இருப்பார். அசீம் மற்றும் தனலட்சுமி அகியோரிடம் இல்லாத ஒன்று விக்ரமிடம் உள்ளது. அது சரியான நிலைப்பாடும், அமைதியும். அதனால் நிச்சயம் டைட்டில் வின் செய்வார் என்று கூறியுள்ளார். 

 

Share this story