"நீங்கலாம் எதுக்கு உள்ள வந்தீங்க? "பட்டாசாய் வெடித்த 'விஜே பார்வதி' – திக்குமுக்காடி போன 'மைனா'.

photo

பிக்பாஸ் தமிழ் இது வரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனும் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. அந்த வகையில் வீட்டில் தற்போது ஏழு போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். இந்த வாரம் Ticket to Finalaeவை வென்ற அமுதவானனை தவிர மற்றவர்கள் நாமினேஷனில் உள்ளனர். எனினும் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

photo

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜே பார்வதி, மைனாவிடம் சரமாரியாக கேள்விகேட்கிறார். அதற்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறி நிற்கிறார் மைனா. பார்வதி முதலில் “நீங்க எதுக்காக வந்தீங்க?, நிஜமாவே நீங்க பண்ற கமெடிக்கு ஹவுஸ்மேட்ஸ் சிரிக்கிறாங்கண்ணு நினைக்கிறீங்களா?; இந்த வீட்டுல மைனா தெரியல…..ஏன் தெரியாம போனீங்க?, டைட்டில் வின்பண்ண நான் வரல ……நான் வரேன், நான் பாட்டுக்கு இருப்பேன், அனுப்பிவிட்டா போய்டுவன், இப்படி இருக்க நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” என தொடர்ந்து அடுக்கடுகான கேள்விகளால் மைனா திக்குமுக்காடி போய்யுள்ளார்.

photo

தொடர்ந்து யாரிடம் எந்த மாதிரியான கேள்விகளை விட்டிற்குள் வந்தவர் எழுப்ப போகிறர்கள், அதற்கு போட்டியாளர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.

Share this story