”Will You Marry Me” பிக்பாஸ் வீட்டில் ப்ரபோஸ் செய்த சௌந்தர்யா!

soundarya

பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான ப்ரோமோவில் விஷ்ணுவிடம் பிக்பாஸ் போட்டியாளர் சௌந்தர்யா தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யா விஷ்ணுவிற்கு ப்ரபோஸ் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி தற்போது 80 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரம் எவிக்‌ஷனில் நடிகர் ரஞ்சித் வெளியேறினார். இந்த வாரம் எந்த வித கடினமான டாஸ்கும் இல்லாமல் ஃப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. ஃப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் முதல் நாளில் தீபக், மஞ்சரி, விஷால் ஆகியோரது உறவினர்கள் வந்து சென்றனர். இரண்டாவது நாளில் பவித்ரா, அன்ஷிதா ஆகியோரது உறவினர்கள் வந்தனர்.


அதேபோல் மூன்றாவது நாளில் சௌந்தர்யா, ரயான், ரானவ் ஆகியோரது உறவினர்கள் வந்து சென்றனர். நேற்று ஜெஃப்ரி, அருண், ஜாக்குலின் மற்றும் கடைசியாக முத்துக்குமரனின் உறவினர்கள் வந்து சென்றனர். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த உறவினர்கள் அனைவரிடமும் மற்ற போட்டியாளர்களிடம் தங்களுக்கு எதாவது முரண்பாடுகள் உள்ளதா என கேட்கப்பட்டது. இதற்கு அனைவரும் தங்களது முரண்பாடுகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.


இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் 7வது சீசனில் பங்கேற்ற விஷ்ணு, சௌந்தர்யாவை பார்க்க இன்று வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது சௌந்தர்யா விஷ்ணுவிடம் will You marry me என கேட்டு தனது காதலை வெளிப்படுத்தினார். அப்போது மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வரலாற்றில் முதல் ப்ரபோஸல் என கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

முன்னதாக இந்த சீசன் தொடக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சௌந்தர்யா செல்லும் போது விஷ்ணு அவருடன் இருந்து வழியனுப்பி வைத்தார். வெளியில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது சௌந்தர்யா, வெளிப்படையாக ப்ரபோஸ் செய்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story