ஒரு நிமிடம் கூட இருக்கமுடியாது.. பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை...

ஒரு நிமிடம் கூட இருக்கமுடியாது.. பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை... 

பிக் பாஸ் 7-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட எழுத்தாளர் பவா செல்லதுரை எதிர்பாராத வகையில், தாமாக முன்வந்து போட்டியிலிருந்து வெளியேறினார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரம் முதலே அனல் பறக்கத் தொடங்கியது. ஆட்ட விதிகளின்படி, நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.

ஒரு நிமிடம் கூட இருக்கமுடியாது.. பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை... 

இதில் அனன்யாவை வெளியேற்றும் முடிவை அறிவிக்கும் முன்னர் கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும் யார் வெளியே செல்வார் என்பதை யூகத்தின் அடிப்படையில் கேட்டார். இதில் பெரும்பாலானோர் பவா செல்லதுரை பெயரை தான் சொன்னார்கள். இறுதியில் மக்கள் தீர்ப்பே இறுதியானது எனக்கூறி அனன்யாவை கமல் வெளியேற்றினார்.

ஒரு நிமிடம் கூட இருக்கமுடியாது.. பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை... 

இந்நிலையில், திருப்பமாக எழுத்தாளர்  பவா செல்லதுரை தற்போது திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸிடம் பேச வேண்டுமென்று இரண்டு மணி நேரம் கோரிக்கை வைத்த பவாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், இங்கு மனித மனதின் குரூரங்கள் வௌிப்படுகின்றன. ஒரு நிமிடம் கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது எனக்கூறியுள்ளார். இறுதியாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். 
 
Share this story