யாருக்கும் தெரியாமல் ADK செய்த செயல் – விளாசி தள்ளிய பிக்பாஸ்; “வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவதாக வார்னிங்”.

photo

பிக்பாஸ் சீசன் 6, இறுதிகட்டத்தை நோக்கி பயணித்து வரும் நிலையில் தற்போது “Ticket to Finale” டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் முழு உழைப்பை செலுத்திவரும் நிலையில் ஏடிகே செய்த செயலால், பிக்பாஸ் அவரை விளாசி தள்ளியுள்ளார்.

photo

சமீபத்தில் நடந்த டாஸ்க்  ஒன்றில் ஏடிகே சுயநினைவை இழந்தநிலையில், அவரை மீட்டு மருத்துவர்களிடம் அனுப்பி வைத்துள்ளனர் சக போட்டியாளர்கள், ​​சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பிய பின்னரே ஆட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

photo

மருத்துவர்கள் ஏடிகேவின் உடல்நலனை கருத்தில் கொண்டு இனி புகைப்பிடிக்க கூடாது என அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதனை கவனத்தில் கொள்ளாமல் அவர் தொடர்ந்து Smoking Zoneக்கு சென்று புகைபிடித்துள்ளார். இதனை கவனித்த பிக்பாஸ் ஏடிகேவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து” மருத்துவர்கள் உங்களை ஸ்டிக்டாக புகைப்பிடிக்க கூடாது என கூறியுள்ளனர், வீட்டில் இருக்கும் மன அழுத்தம் எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் இப்படி செய்வதால் உடல் மேலும் பலவீனமடையும்; இந்தனை நாட்கள் உழைத்த உழைப்பு வீணாகிவிடும், இதையும் மீறி மேலும் புகைப்பிடித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவேன்” என பிக்பாஸ் எச்சரித்துள்ளார்.  இதற்கு ஏடிகே “ சரி பிக்பாஸ் இனிமேல் இதை செய்யமாட்டடேன் என உறுதியளித்துள்ளார்”


 

Share this story