Z தமிழில் வரும் புது ரியாலிட்டி ஷோ : நடுவர் அவதாரம் எடுத்த பார்த்திபன்..

Z தமிழில் வரும் புது ரியாலிட்டி ஷோ : நடுவர் அவதாரம் எடுத்த பார்த்திபன்..   

இளம் தலைமுறையினரை கவரும் வகையில்  Zee தமிழ் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தும் புதிய ரியாலிட்டி ஷோவில் நடிகர் பார்த்திபன் நடுவராக களமிறங்குகிறார்.   

சேட்டிலைட் சேனல்கள் அதிகரித்தும் வரும் சூழலில், ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டி புதுப்புது ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவரிசையில்   ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய மற்றும் இன்றைய தலைமுறை பார்வையாளர்களுக்கு ஏற்ற, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 'சிங்கிள் பசங்க' என்ற புதிய ரியாலிட்டி ஷோ மூலம், பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அதன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் வரிசையை வலுப்படுத்த உள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழாவை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  இது எந்த மாதியான நிகழ்ச்சியாக இருக்கும் என  ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பாப்பு எழுந்துள்ளது. அதாவது,  'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில், பத்து இளம் இளைஞர்கள் 'ஏஞ்சல்ஸ்' எனப்படும் பிரபலங்களுடன் ஜோடியாக இணைவார்கள் என்றும்,   இந்த ஜோடிகள், அவர்களின் கவர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் தொடர்பு திறன்களை சோதிக்கும் வகையில், ஒவ்வொரு வாரமும் சவால்களை எதிர்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.  

parthiban

போட்டியாளர்கள் மற்றும் ஏஞ்சல்ஸ் ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து போட்டி முழுவதும் இணைந்து செயல்பட்டாலும், நிபுணர்களின் குழு ஒன்றும் அவர்களை பின்னிருந்து வழிகாட்ட இருக்குமென தெரிகிறது.  

இந்த நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில், நிகழ்ச்சியின் நடுவர்களான பார்த்திபன், ஆலியா மானசா, மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரும் தொகுப்பாளினி மணிமேகலையும் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியின் வடிவம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி உலகில் இது எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பது குறித்து அனைவரும் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய நடுவர் பார்த்திபன், "சிங்கிள் பசங்க என்பது வெறும் காதல் பற்றிய நிகழ்ச்சி அல்ல. இது சுய கண்டுபிடிப்பு, மாற்றம் மற்றும் தன்னம்பிக்கை பற்றியது. இந்த இளைஞர்கள் தங்கள் வழக்கமான வட்டத்திலிருந்து வெளியே வந்து, தங்களைத் தாங்களே கண்டறிவதை பார்ப்பது ஊக்கமளிக்கிறது என்றார். 

Z தமிழில் வரும் புது ரியாலிட்டி ஷோ : நடுவர் அவதாரம் எடுத்த பார்த்திபன்..   

மேலும் இந்த நிகழ்ச்சி மிகவும் வேடிக்கையாகவும், துணிச்சலானதாகவும், இன்றைய தலைமுறைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது" எனவே சிங்கிள் பசங்க ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களின் வரிசையில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய அனுபவத்தை கொண்டு வரும் என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பது குறித்து ஆலியா மானசாவிடம் கேட்ட போது அவர் காதலில் அனுபவம் உள்ளதால் போட்டியாளராக பங்கேற்கும் சிங்கிள் பசங்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லி தர முடியும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் இது இசை, நடனம், நடிப்பு என அனைத்தும் கலந்த நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்தார். 

ஸ்ருதிக்கா இது வித்தியாசமான நிகழ்ச்சியாக மக்களை கவரும், மாறுபட்ட கான்செப்ட்டில் இந்த நிகழ்ச்சி பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார்.


 

Share this story