சஞ்சய்யின் தங்கைக்கு நிச்சயம் நடக்குமா ?.. 'வித்யா நம்பர் 1' சீரியலில் புதிய திருப்பம் !

vidhya no.1

'வித்யா நம்பர் 1' சீரியல் நிகழவிருக்கும் புதிய திருப்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

 ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது புதியதாக ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் 'வித்யா நம்பர்.1'.  இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. படிக்காத கதாநாயகியான வித்யாவை சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்துக்கொள்கிறார்‌ சஞ்சய். ஆரம்பத்தில் வித்யாவை பிடிக்கவில்லையென்றாலும் தற்போது இவர்களுள் காதல் உருவாகி புரிந்துக் கொள்கிறார் சஞ்சய். 

vidhya no.1

ஆனால் சஞ்சய்யின் அம்மாவிற்கு வித்யாவை  பிடிக்கவில்லை என்பதால், அவளை படிக்க பயிற்சி வகுப்பிற்கு அனுப்புகிறார் சஞ்சய். அங்கு வித்யா சில பிரச்சினைகள் ஏற்பட அதை தட்டி கேட்கிறார்‌ சஞ்சய். இதனால் வித்யா படிப்பு‌ மீண்டும் கேள்வி குறியாகிறது. இப்படி சீரியல் பரபரப்பு களத்துடன் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

vidhya no.1

இந்நிலையில் சஞ்சையின் தங்கை மானசாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற வருகிறது. இதையொட்டி நிச்சயதார்த்தம் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் மானசாவிற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை வேறொரு பெண்ணுடன் இருப்பதை வித்யா பார்த்து விடுகிறாள். இந்த விஷயம் சஞ்சய்க்கு தெரிய வர அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து நிச்சயதார்த்தை நிறுத்த சஞ்சய் முயற்சி செய்யும்‌ பரபரப்பு களத்துடன் சீரியல் நகர்ந்து வருகிறது. 

Share this story