பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ் - விருது வென்றவர்கள் யார்?

tn

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீதமிழ், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தொடர்ந்து தனித்துவமான வரவேற்பு கிடைத்துவருகிறது. சீரியல்கள் மட்டுமின்றி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களை கவர்ந்து வருகிறது. 

சீரியல்கள்,ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மக்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை தொலைக்காட்சி நிறுவனம் ஊக்கப்படுத்த மறைப்பதில்லை, 2024 தொடங்கியதும் ஜீதமிழ் விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்திய நிலையில் தற்போது ஜீதமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீதமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்தது. 

tn

மிகபிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர்1சீரியல், பெஸ்ட் அம்மா பாசம், போல்ட் நடிகை, இதயம் தொட்ட தொடர், பெஸ்ட் ரொமான்ஸ், பெஸ்ட் ஜோடி, பெஸ்ட் மாமியார் - மருமகள், பெஸ்ட்எமோஷன், பெஸ்ட்ஆக்ஷன், பெஸ்ட்மாஸ்பில்டப், பெஸ்ட்காமெடி, குடும்பங்களை கவர்ந்த சீரியல் என பல தலைப்புகளில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

இயக்குனர்ஹரி, மிஸ்கின், சுந்தர்சி, சீமான், தமிழிசை சௌந்தராஜன், மிர்னாலினி, மீனாட்சி, சங்கீதா, விடிவிகணேஷ், ரித்விகா, ஜி.விபிரகாஷ், அருண்ராஜாகாமராஜா, கதிர்எனபலநடிகர், நடிகைகள் இந்த கோல்டன் மூமென்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

tnt

இந்த விருது விழா நிகழ்ச்சி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாக உள்ளதாகவும் முதல் பாகம் மே1-ம் தேதி மதியம் 1மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான ப்ரோமோ வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் விருது வாங்கினார்கள்? உங்க பேவரைட் நட்சத்திரங்கள் என்ன பேசினார்கள்? என்பதை எல்லாம் அறிந்துகொள்ள கோல்டன் மூமென்ட்ஸ் 2024 நிகழ்ச்சியை உங்கள் ஜீதமிழ் தொலைக்காட்சியில் காணதவறாதீர்கள்.
 

Share this story