'ஜீ தமிழ்' ரசிகர்களுக்கு செம ட்ரீட்.!- முன்கூட்டியே தொடங்கும் புத்தாண்டு கொண்டாட்டம்.

photo

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக தடம் பதித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

photo

சமீபத்தில் சரிகமப நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நடந்து முடிந்ததை தொடர்ந்து சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது. பல வகையான ஆடிஷன் மூலமாக மொத்தம் 24 போட்டியாளர்கள் தேர்வாகிய நிலையில் கடந்த வாரம் ஒளிபரப்பான மெகா ஆடிஷன் மூலமாக மொத்தம் 12 போட்டியாளர்கள் தேர்வாகினர்.

photo

இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி லோடட் 2 நிகழ்ச்சியின் அறிமுக சுற்று நடைபெற உள்ளதை தொடர்ந்து வரும் இன்று மதியம் 3 மணிக்கு பிரதீப் குமாருடன் சரிகமப குழுவினர் இணைந்து கலக்கிய காற்றின் மொழி என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

photo

நாளை புத்தாண்டு தினமான திங்கள் கிழமை காலை 8 மணிக்கு சுகி சிவம் தலைமையில் வெற்றியை தீர்மானிப்பது அறிவா? உணர்ச்சியா? என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதுபிறகு மதியம் 3 மணிக்கு காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கோஷ்டி' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது, சிறப்பு பட்டிமன்றம் மற்றும் திரைப்படங்களுடன் புத்தாண்டு தினத்தை ஜீ தமிழோடு இணைந்து கொண்டாடி மகிழுங்கள்.

Share this story