விரைவில் சூப்பர் ஹிட் சீரியலுக்கு என்ட்டு கார்டு.. சோகத்தில் ரசிகர்கள் !

rajini

பிரபல சீரியலான ‘ரஜினி’ சீரியலை விரைவில் முடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜீ தமிழ் தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘ரஜினி’. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற ‘அனுகிரஹம்’ என்ற சீரியலில் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வந்தது. தற்போது 650 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. 

rajini

இந்த சீரியலில் நடிகை ஸ்ரேயா, அருண் கிரைசர் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஸ்ரீலேகா பார்த்தசாரதி, பாப்பி மாஸ்டர், ஆண்ட்ரூஸ் ஜேசுதாஸ், சுபிக்‌ஷா, கயாரோஹணம், ஹேமந்த்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை எஸ்.எஸ்.சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். 

rajini

தற்போதைய கதைப்படி ரஜினி மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் பிரிந்து செல்வது போல் கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் க்ளைமேக்சை நெருங்கிவிட்ட இந்த சீரியலை விரைவில் முடிக்க செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



 

Share this story