விவாகரத்திற்கு போட்டோஷூட் நடத்திய சீரியல் நடிகை... வியப்பில் ரசிகர்கள் !

Shalini

 பிரபல சீரியல் நடிகை ஒருவர் விவாகரத்து செய்ததற்கு போட்டோ ஷூட் நடத்தியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

சின்னத்துறையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ஷாலினி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக மாறினார். முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

Shalini

இதற்கிடையே ஏற்கனவே விவாகரத்து பெற்ற நடிகை ஷாலினி, ரியாஸ் என்பவரை காதலித்து வந்தார். முதலில் ரசிகர் என்று கூறி ரியாஸ் ஷாலினியை காதலித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

Shalini

தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், பல பெண்களுடன் ரியாஸ் தொடர்பில் இருப்பதாக கூறி அவரை நடிகை ஷாலினியை விவாகரத்து செய்தார். இந்நிலையில் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கொண்டாடும் விதமாக போட்டோஷூட் ஒன்றை எடுத்து நடிகை ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

 Shalini

‌ இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து  தெரிவித்துள்ள நடிகை ஷாலினி, தவறான திருமணத்திலிருந்து விலகுவது நல்லது தான். காரணம் உங்களது மகிழ்ச்சி மிகவும் முக்கியம். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு தேவையான மாற்றங்களை செய்யுங்கள். விவாகரத்து என்பது வாழ்க்கையின் தோல்வியல்ல என்று கூறியுள்ளார்.‌

 

Share this story