தை திருநாளை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அசத்தல் அறிவிப்பு

தை திருநாளை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அசத்தல் அறிவிப்பு

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் எப்போதும் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது.  தை திருநாளை முன்னிட்டு, ஜீ தமிழ் சீரியல்களில்  அதிரடியான கதைக்கள மாற்றங்கள் இடம் பெற உள்ளன. இது குறித்து ப்ரைம் டைம் சீரியல் நாயகிகள் இடம்பெறும் ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 

தை திருநாளை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அசத்தல் அறிவிப்பு

மேலும், பொங்கலை மேலும் மகிழ்ச்சிகரமான கொண்டாடுவதற்காக சீதா வீட்டு சீதனம் என்ற பெயரில் பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, அரை சவரன் தங்க மோதிரம் ஆகியவை பொங்கல் சீதனமாக வழங்க உள்ளது ஜீ தமிழ். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியல் தொடரில் இறுதியில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு சரியான பதிலை சொல்லி இந்த சீதனத்தை மக்கள் வென்று செல்லலாம். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு 5 கேள்விகள் வீதம் ஐந்து அதிர்ஷ்டசாலி போட்டியாளர்கள் இந்த சீதனத்தை பெற உள்ளனர்‌. 

Share this story