ஜீ தமிழில் நியூ என்ட்ரி கொடுக்கும் நினைத்தேன் வந்தாய்.. சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம்....

ஜீ தமிழில் நியூ என்ட்ரி கொடுக்கும் நினைத்தேன் வந்தாய்.. சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் மாற்றம்....

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் நினைத்தேன் வந்தாய் என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது. 

கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடிக்க, கீர்த்தனா பொட்வால் கணேஷின் முதல் மனைவியாகவும் ஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமின் குழந்தைகளாக கனிஷ்கா, கௌஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடிக்க மேலும் பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர். மனைவியை இழந்த எழில் ( கணேஷ் வெங்கட்ராம் ) தனது 4  குழந்தைகளை வளர்க்க தடுமாறுகிறார், இந்த நிலையில் சுடர் ( ஜாஸ்மின் ) என்ற பெண் அவனது வாழ்க்கைக்குள் வர அதன் பிறகு நடக்க போவது என்ன? சுடர் 4 பிள்ளைகளின் மனங்களை கொள்ளை கொண்டு அவர்களுக்கு தாயாக மாறுவாளா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய சீரியலால் சில சீரியல்களின் ஒளிபரபப்பு நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன்  சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியல் இனி வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 
 

Share this story