பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரானா தொற்று உறுதி…
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரானா தொற்று உறுதியானதால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
கொரானாவின் 2வது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. . நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 2923பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கொரானா தொற்றின் தாக்கம் திரைப்பிரபலங்களை விடாது துரத்தி வருகிறது.இதற்கிடையே அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. மாபெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகர் அல்லு அர்ஜூனும் தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் கொரானா பரிசோதனை செய்துக்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.இதனால் கொரானா வழிமுறைகளை பின்பற்றி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரானா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டுகிறேன். அனைவரும் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருந்து, வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.